சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றும் 43 இந்தியர்களுக்கு கொவிட்

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவந்த இந்திய பிரஜைகள் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அங்கு பணியாற்றிவந்த 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதுடன், அவர்கள் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலையில் 780 இலங்கையர்களும், 480 இந்தியர்களும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.