சுகாதார ஆலோசனைகளை மீறி பாடசாலைக்கு வந்த ஆசிரியரால் மாணவர்களுக்கு நேர்ந்த அசௌகரிய நிலை!!

சுகாதார ஆலோசனைகளை மதிக்காது பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் ஒருவர் காரணமாக அனுராதபுர பாடசாலை ஒன்றில் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் விலிசிங்க மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த முதலாம் திகதி குறித்த ஆசிரியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் என சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியிருந்த போதும் குறித்த ஆசிரியர் அதனை மதிக்காது பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த ஆசிரியர் பாடம் எடுத்த 6 வகுப்புக்களும் தற்காலிகமாக மூடப்பட்டு மாணவர்கள், 11 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.