சுகாதார சேவை சங்கத்தினரின் தொழிற்சங்க போராட்டம் 2 ஆவது நாளாகவும் தொடர்கிறது

சுகாதாரத் துறையின் துணை மருத்துவ சேவையின் 8 மருத்துவ சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நேற்றைய தினம் இந்த தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக துணை மருத்துவ சேவையின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைளுக்கான உரிய தீர்வை சுகாதார அமைச்சு வழங்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.

Comments are closed.