சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரசபையின் முதல்வர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகாரசபைக்குட்பட்ட பகுதியில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலிலே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

 

Comments are closed.