சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள்

சுகாதார பணியாளர்களுக்கு இன்று (24) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தெரிவுசெய்யப்பட்ட நிரப்பு நிலையங்கள் ஊடாக  எரிபொருள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.