சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறது – ஷெயான் சேமசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் விதத்தை உணரக் கூடியதாக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் போன்று அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி நடக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட கருத்து அப்படியான ஒன்றாக கருத முடியும் எனவும் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு முக்கியமான தருணத்தில் தமது சூழ்ச்சியை செயற்படுத்த இவர்கள் காத்துக் கொண்டிருக்கலாம். எவ்வாறாயினும் அப்படியான சூழ்ச்சிகளால் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த முடியாது எனவும் ஷெயான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.