சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன.

Comments are closed.