சுய விருப்பில் பிசிஆர் செய்யலாம்

பேருவளை சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட அளுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்கள், சுய விருப்பின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் பரிசோதனையை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக,  பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.