ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் – பேராசிரியர் சர்வேஸ்வரன்
மாகாணங்களுக்கான ஆளுநர் தெரிவின் போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் தெரவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், மாகாண சபைகளின் முதலமைச்சராக தெரிவு செய்பவரின் ஒத்துழைப்பு ஆளுநர் தெரிவின் போது இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.