ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வாழ்த்துச் செய்தி!

2021 புதிய வருடத்தை உறுதி மற்றும் அர்பணிப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்போமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதுவருட வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை நோக்கிய செழிப்பான பயணத்தை ஆரம்பித்த பொழுது அதற்கு கொரோனா தொற்று தடையாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த நிலையில் சர்வதேச நாடுகளை விடவும்  எமது நாடு சவால்களை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று, புதிய வருடத்திலும் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Comments are closed.