ஜனாதிபதி தேர்தலுக்கு அனுரகுமாரவும் தயார்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

இன்று (16) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.

Comments are closed.