ஜனாதிபதி – பொதுஜன பெரமுன எம்.பிக்கள் இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார்.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டமாக நாளை (29) முற்பகல், ஜனாதிபதி மாளிகையில் அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளுக்கும் விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.