ஜனாஸா விவகாரம் குறித்து முக்கிய கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு மற்றும் யோசனைகளை உள்ளடக்கி கடிதமொன்று, மதத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.