ஜூன் மாதத்தில் சாதாரண தர பெறுபேறுகள்

மார்ச் 01 முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய ஜூன் மாதத்தில் இருந்து உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று(22) இதனைக் கூறியுள்ளார்.

Comments are closed.