டிக்கோயாவில் 100 அடி உயரமான மரத்தின் மீதேறி தனிநபர் போராட்டம்

நோர்வூட் – டிக்கோயா – இன்ஜஸ்ரி பகுதியில், நபர் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த நபர், இன்று (21) காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சுமார் 100 அடி உயரமான மரத்தின் மீதேறி, 44 வயதுடைய ஒருவரே,  இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments are closed.