டீச்மேனை வீழ்த்தி ஜெசிகா பெகுலா இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டீச்மேன், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

1 மணி 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஜெசிகா பெகுலா, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜில் டீச்மேனை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இரவு 10 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஒன்ஸ் ஜபீருடன், ஜெசிகா பெகுலா மோத இருக்கிறார்.

Comments are closed.