டெங்கு காய்ச்சலினால் பாதீக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னாரில் அடையாளம்

மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதீக்கப்பட்ட சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுமி டெங்கு தொற்றிற்கு உள்ளாகியமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீண்ட காலத்தின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் புதிதாக டெங்கு காய்ச்சலினால் பாதீக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசாலை பயகுதியில் உள்ள குறித்த சிறுமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மன்னார் மாவட்ட தொற்று நோய்த்தடுப்பு பிரிவினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.