டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமியொருவர் மரணம்!

திருகோணமலை் மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்றையதினம் (18) சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா மகளிர் கல்லூரியில் இரண்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் 7 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்கள் காய்ச்சல் காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments are closed.