டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்காணிக்க ட்ரோன் தொழிநுட்பம்
மேற்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டெங்கு நுளம்புகளைளை அழிக்க திரவம் தெளித்தல், அத்துடன் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும் அதே தொழில்நுட்பத்தை வான்வழி கண்காணிப்புக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குப் பயன்படுத்தக்கூடிய இரண்டு ட்ரோன் கமெராக்கள் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரோஷன் குணதிலகவினால் இன்று (18) காலை விமானப்படைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.