டெல்லி அணியை பழிக்கு பழிவாங்கிய மும்பை

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது

ஆனால் இந்த போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில் ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஐபிஎல், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலை மும்பை அணிக்கு இருந்தது .அப்போது டெல்லி அணி மும்பையை வென்றது. இதனால் அப்போது ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது

இதேபோல், 4 ஆண்டுக்குப் பிறகு மும்பை அணி டெல்லியை தோற்கடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

Comments are closed.