தகராறில் ஈடுபட்ட நால்வர் மல்லாவி பொலிஸாரினால் கைது

மல்லாவி அனிஞ்சியங்குளம் 2 ம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுப்பிரியர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இருபிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரராசா (வயது 33) என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments are closed.