தகராறில் ஒருவர் கொலை

பதுளை – அசேலபுர பிரதேசத்தில் 65 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நேற்று (02) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களினால் குறித்த நபரின் வீட்டிற்கு கல் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Comments are closed.