தங்கத்தை கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவர் கைது

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலையச் செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 490 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.