தட்டுப்பாடு; அரிசி கேட்க தயாராகும் அரசாங்கம்

நாட்டில் அரிசி விலை உயர்வடைந்துள்ள நிலையில் 03 நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்தியா, மியன்மார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஒரு இலட்சம் மெற்றின் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் பேச்சு நடத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

எனினும் இன்றுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், இன்று நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித்தீர்மானம் எட்டப்படலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, தற்போது சந்தையில் அரிசி விலை அதிகரித்திருப்பதோடு பல இடங்களிலும் தட்டுப்பாடு நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.