தந்தையை தாக்கி கொலைசெய்த மகன் கைது

குருவிட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட படதொட்ட பிரதேசத்தில் நபரொருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குப்பை கூழமொன்றிக்குள் தவறி விழுந்ததன் காரணமாக இந்நபர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்தவரின் மனைவி காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.

அதற்கமைய, நேற்றைய தினம் (27) காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது மகனினால் தாக்கப்பட்டதாலேயே குறித்த நபர் மரணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் படத்தோட்ட – குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments are closed.