தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில் தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்த நபர் சம்பந்தமாக இதுவரையிலும் ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.