தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிரான புதிய தண்டனை!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்களுக்கு  பி.சி.ஆர். பரிசோதனை அல்லது rapid antigen பரிசோதனை  மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல்  குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.