தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அதிகமானோர் கைது

நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, ​​தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.