தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு

தனியார் மேலதிக வகுப்புகளை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கூறினார்.

Comments are closed.