தம்மிக்க பெரேரா எம்.பி பதவியிலிருந்தும் விலகுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்ட பாரிய நெருக்கடியையடுத்து, தமது அமைச்சுப் பதவியிலிருந்து  தம்மிக்க பெரேரா விலகினார்.

முன்னதாக, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமெனவும் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.