தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட ஏற்பாடு..!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் சில நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதாக பிரதமர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பாடசாலை உரிமைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

அவ்வியக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்இ பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சிலர் இன்று கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தனர்.

அதன் பின் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றின் நிமித்தம் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரதமரின் மேலதிக செயலாளர் எம்.ஏ. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்வதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.