திகன நில அதிர்வு விவகாரம் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாதிப்பில்லை

கண்டி – திகன பகுதியில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளினால், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

திகன மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து அண்மைக் காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம்  இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதிகளில் இரண்டு ரிச்டர் அளவுக்கும் குறைவாகவே நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்புகின்ற சந்தர்ப்பத்தில், இவ்வாறான அதிர்வுகள் இயற்கையாக உருவாகுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.