திங்கட்கிழமை முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம்

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்திற்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான சாட்சியங்களை கோரும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (3) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.