திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று பயாகல – பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, விமான தரையிறக்கப்பட்ட இடத்துக்கு விமானப்படை குழுவொன்று சென்றுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.