திமிங்கலத்தால் மீனவருக்கு அடித்த அதிஷ்டம்
தாய்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்ததை கண்டெடுத்ததால் இலட்சாதிபதியாக மாறியுள்ளார்.
நியோம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த நராங் பேச்சராஜ் என்ற மீனவர் சென்ற போது அங்கு அம்பர் எனப்படும் திமிங்கலம் வாந்தி எடுத்திருந்த மெழுகு போன்ற பொருளைக் கண்டார்.
இதனை சோதனை செய்த போது அது அம்பர்கிரீஸ் என்பது உறுதியானது.30 கிலோ எடை கொண்ட அம்பர் தற்போது ஒரு மில்லியன் யூரோ மதிப்புக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அதிக மதிப்புக் கொண்ட வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கு அம்பர் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.