திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

திருகோணமலை – குச்சவெளி – இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மூன்று இளைஞர்கள் இணைந்து படகு ஒன்றில் பயணித்த போது இந்த அனர்த்தம் இன்று காலை நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

குறித்த படகில் பயணித்த ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குச்சவெளி காவல்றையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.