திருகோணமலையில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு

திருகோணமலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் திருகோணமலை, 3ம் கட்டை, புளியங்குளம் பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சமைக்கும் போது எரிவாயு வெடித்து அதன் அடுப்பு சிதறி தீப்பற்றியது.  இதனால் சமையலில் ஈடுபட்டிருந்த குறித்த வீட்டின் பெண்மணி வெளியில் ஒடிவந்து அயலவரில் துணையுடன் அடுப்பையும் கேஸ் சிலிண்டரையும் வீட்டிற்கு வெளியே கொண்டுசென்று தீயை அணைத்ததாக அவ்வீட்டின் பெண்மணி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருகோணமலை தீயணைக்கும் பிரிவிற்கு அறிவித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காயங்களோ உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.