திருகோணமலை பிரபல பெண்கள் பாடசாலையில் மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மட்டுமே வருகை!

திருகோணமலை நகரில் உள்ள மெதடிஸ்ட் பிரபல பெண்கள் பாடசாலையில் இன்று 365 மாணவிகளில் 4 மாணவிகளும் நான்கு ஆசிரியர்களும் வருகை புரிந்துள்ளதாக பெண்கள் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

கடந்த 24 ம் திகதி டைவீதியில் அடையாளம் காணப்பட்ட 17 கொவிட்19 தொற்றாளர்களில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரும் உறதிசெய்யப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் மாணவிகளின் வருவு குறைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எனினும் கொவிட்19 தொற்று உள்ளான ஆசிரியர்மூலம் பெண்கள் பாடசாலையில் தொற்று பரவக்கூடிய நிலையில் இல்லை என திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயினும் கொவிட்19 தொடர்பான வதந்தி பரவிய நிலையில் மாணவிகளின் வரவில் இன்று பாரிய வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது.

மேலும் குறித்த கொவிட்19 தொற்றாளரான ஆசிரியின் தொடர்பில் உள்ளவர்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 இல்லை என திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.