திருட்டில் ஈடுபட்ட இருவர் சிசிரீவி உதவியால் சிக்கினர்

ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் அடகு பிடிப்பு நிலையமொன்றில் இருவர் கொள்ளையிட முயன்றுள்ளனர்.

எனினும், அது தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, நாவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அந்நபர் திருட்டில் ஈடுபடும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில்  பதிவாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த இருவர் முதலில் ராஜகிரிய பகுதியிலுள்ள அடகுபிடிப்பு நிலையமொன்றை உடைக்க முற்பட்டுள்ளனர். எனினும் குறித்த முயற்சி பலனளிக்காததால், அவர் நாவல பகுதியில் உள்ள கட்டுமானப்பொருள் விற்பனை நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து 5 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் வயர்களை திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இரு சம்பவங்களும் ஒரே நாளில் பதிவாகியுள்ளதுடன், தெஹிவளை மற்றும் ராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபரும், மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.