திருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மயங்கி வீழ்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வீதி, நல்லூரைச் சேர்ந்த தெ.தர்சன் (வயது-29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் திருநெல்வேலியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் நிலையில், கடந்த 2ஆம் திகதி கடையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் நேற்றுமுன்தினம் இரவு மயக்க நிலையிலேயே உயிரிழந்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

Comments are closed.