திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழைய, கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என எச்சரிக்கை தகவல் ஒன்றை திருமண சேவைகள் சங்கம் விடுத்துள்ளது.

நாட்டில் 50 பேருடன் திருமண நிகழ்வுகளை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் அனுமதி முன்னெடுத்து செல்வதற்கான, சந்தர்ப்பத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு திருமண சேவைகள் சங்கத்தின் அதிகாரிகள் ஹோட்டல் உட்பட அனைத்து தரப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள நிராகரிக்கும் 20, 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.