தீக்கிரையாகி ஒருவர் பலி

இன்று (14) காலை 8 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லிந்துலை லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதான மருதெய்வீரன் பெருமாள் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லிந்துலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்த இவர், வழமை போன்று சமைத்துக்கொண்டிருந்தபோது உடலில் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது உணவகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், உணவகத்தின் உரிமையாளர் உணவகத்திற்கு வந்த போது சமையல்காரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.