தீப்பரவலில் 8,200 கோழிகள் பலி

கொட்டதெனிய – வராகல பகுதியில் உள்ள, கோழி பண்ணையில் ஏற்பட்ட தீப்பரவலில் 8,200 கோழிகள் பலியாகின.

இன்று முற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Comments are closed.