தீயாய் பரவும் விக்ரம்’ போஸ்டர்
விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், வருகிற 15ம் தேதி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதனை நினைவூட்டும் விதமாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இடம்பெற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.