துன்புறுத்திய கணவன்: பெண் தற்கொலை

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டி துன்புறுத்தியதால் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பெங்களூருவை சேர்ந்த வினய் என்பவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இருவரும் மென்பொருள் துறையில் பணியாற்றிய போது 5 வருடங்களின் முன் அறிமுகமாகி, திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு மனைவி மீது கணவனுக்கு சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதேவேளை, மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும் பேச கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து செல்போனை சோதிப்பது நண்பர்களுடன் பேசினால் சந்தேகிப்பது போன்ற விடயங்களை அவர் செய்துவந்ததால் குறித்த பெண் மன உளைச்சலில் இருந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் என்பதால் அவரை விட்டு விலகவும் முடியாமல் தவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் சந்தேகம் அளவுக்கு அதிகமாக சென்றுள்ளது. அவர் சில நாட்களாக சங்கீதாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கணவனை தேடி வருகின்றனர்.

Comments are closed.