துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

செவனகல – கட்டுபிலவெவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சிலர் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மது அருந்திக் கொண்டிருந்த போது, ​​ஒருவர் மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன்,  துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்றுமொருவர் இரும்புக் கம்பியினால் தாக்கியுள்ளார்.

எனினும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்திரம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments are closed.