துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கொஸ்கொட தாரகவினால் பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நேற்று (16) குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்போது அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, மகசீன் மற்றும் 04 9.56 x 17mm தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.