தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவர் தனது மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவர் தனது மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென்னிலங்கையில் நடந்த இந்தச் சம்பவம் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம் ஒபநாயக்க பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

16 வயதுடைய குறித்த மாணவனை அந்த அதிபர் பாடசாலையில் வைத்தே பலமுறை பாலியல் கொடுமை செய்தமை பெற்றோரிடத்தில் மிகுந்த பய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் முக நூலில் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு நல்ல பண்புகளைச் சொல்லிக்கொடுக்கவேண்டிய இவர்களே இப்படி நடந்துகொண்டால் நாளைய சந்ததியை, யாரை நம்பி கல்வி கற்க அனுப்புவது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Comments are closed.