தென்னிலங்கையை வந்தடைந்த யுத்தக் கப்பல்கள்

ரஷ்யாவிற்கு சொந்தமான யுத்த கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் திடீரென கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொனறு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சகம் கருத்து வெளியிடுகையில்,

வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே, நாட்டிற்குள் இந்த யுத்த கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வந்துள்ளன.

கப்பல்சார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு தரித்துள்ளன.

குறித்த கப்பல்கள் சேவைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர், நாளை மறுதினம் 18ஆம் திகதி நாட்டை விட்டு செல்லும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.