தேசபந்து தென்னகோன் – சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த 24 பேரில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனும் உள்ளடங்குவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறும் சட்டமா அதிபரால் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.